சமூக வலைதள செயலிகள் மற்றும் தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

159
சமூக வலைதள செயலிகள் மற்றும் தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி

நீங்கள் சமூக வலைதளத்தில் ஆர்வமாக இருக்கிறீர்களா ? உங்களின் ஆர்வத்தை வருமானமாக மாற்றுவது எப்படி ? நடப்பு சந்தை சூழ்நிலைகளின் படி, ஆன்லைனில் பிராண்டுகள் மற்றும் பிளாகர்ஸ்கள் மூலம் பணம் சம்பாதிக்க அதிகம் விரும்பப்படும் வழிகளில் ஒன்றாக சமூக வலைதளம் உள்ளது.

வாடிக்கையாளர்களுடன், வணிகத்தை இணைப்பதால், சமூக ஊடகங்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் விற்பனையை அதிகரிக்க குறிப்பிடத்தக்க பிரபலத்தை பெற்றுள்ளன. இந்த உலகத்திற்கு உங்களின் திறன் மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்த ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், Youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தலாம். மக்களை ஈர்க்கக்கூடிய உணவு பதிவுகள், மீம்ஸ்கள் மட்டுமின்றி ப்ளாக்கர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக்கலைஞர்களின் கனவை வெளிப்படுத்தவும் சேனல்கள் அனுமதிக்கின்றன.


சமூக வலைதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?

1.இணைப்பு சந்தைப்படுத்தலில் ஈடுபடுங்கள்

இணைப்பு சந்தைப்படுத்தல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஊக்குவிக்கும் செயல்முறையை பணமாக மாற்றுகிறது. இது சமூக வலைதளத்தில் இருந்து வருமானம் பெறுவதற்கான பொதுவான வழிகளில் ஒன்றாகும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களின் சமூக வலைதள பக்கத்தில் மற்றும் youtube சேனல்களில் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தலாம், அதனை பார்வையாளர்கள் வாங்க ஆர்வம் கொள்ளலாம். இதன் அடிப்படையில், ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் கமிசன் தொகையை பெற அனுமதித்து ஒரு துணைநிலை வேலையாக இருக்கச் செய்யலாம்.

இணைப்பு சந்தைப்படுத்தல் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஹர்ஷ் 5 வருடங்களாக பயணித்து வருவதை பாருங்கள்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இணைப்பு சந்தைப்படுத்தலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி மேலும் அறியவும்.


2. சொந்த தயாரிப்புகளை விற்கவும்

உங்களின் வணிகத்தை ஆன்லைனில் கொண்டு வந்து, அதனைப் பற்றிய விளம்பரத்தை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் பற்றி பேசும் வலைபதிவை(blogs) இயக்கி வந்தால், அது தொடர்பான தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் நிலைத்தன்மையை பராமரிக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு ஆடை வடிவமைப்பு பிளாகர் என்றால், உங்களின் வடிவமைப்புகளை(design) உங்களின் ஆதரவாளர்களுக்கு விற்க தேர்வு செய்யலாம். ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ? என்பதற்கான வழிகாட்டுதல்கள் இங்கே.  

இங்கே cashkaro-வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாருங்கள்!


3. தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும்

வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்கு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய வழி விளம்பரங்கள் ஆகும். சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் போது விற்பனையில் கமிசன் ஆக குறிப்பிட்ட தொகையை சம்பாரிக்கலாம். நீங்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்களாக மாற்றக்கூடிய உங்களை பின் தொடர்பவர்களை அதிக அளவில் கொண்டிருப்பது முக்கியம்.

நீங்கள் அதிகப்படியான விளம்பரங்களில் ஈடுபடவில்லை என்றால், ஒரு சமயத்தில் உங்களை பின் தொடர்பவர்களை இழக்க நேரிடலாம். சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிடுவதற்கு நேரத்தை தயார் செய்து வைத்து விட்டால் உங்கள் பதிவுகளுக்கான மதிப்பை சேர்க்க முடியும். வெவ்வேறு தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் போது உங்களின் உள்ளடக்கத்தில் “ Call to action “ எனும் அதிரடி அழைப்பு விடுவது போன்று அனைத்தும் அடங்க வேண்டும் என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் :

  • தொடர்ந்து பதிவிடுங்கள்.
  • தரமான உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்க
  • ஈர்க்கும் வகையில் படங்களை பயன்படுத்துங்கள்
  • தொடர்புடைய ஹஸ்டக்-களை பயன்படுத்துங்கள்
  • வலுவான உறவை வளர்ப்பதற்கு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும்
  • உங்களை பின்தொடர்பவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
  • உங்கள் பதிவுகளின் செயல்திறனை ஆய்வு செய்க.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக செயல்படுவது உங்களின் சேனலின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். உங்கள் ஆதரவாளர்களின் ஆர்வத்தை நீண்ட காலம் தக்க வைக்க நல்ல தரமான உள்ளடக்கத்தை அல்லது செய்திகளை வழங்க வேண்டும். உங்களின் ஆர்வத்திற்கு அர்த்தம் கொடுங்கள். அதன்பின், நீங்கள் சமூக வலைதளங்களில் எப்படி வளர்ச்சி அடைகின்றீர்கள், பணம் சம்பாதிப்பீர்கள் என்று பாருங்கள்.

சமூக வலைதளங்களின் வாய்ப்புகளை தட்டிச் செல்ல விரும்புகிறீர்களா ? உங்களின் சுய விவரத்தை hr@cashkaro.com அனுப்பவும்.